சென்னை: தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மிபதி நியமனம்
- கரூர் மாவட்ட ஆட்சியராக தங்கவேல் ஐஏஎஸ் நியமனம்
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரபுஷங்கர் நியமனம்
- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக சுந்தரவல்லி ஐஏஎஸ் நியமனம்
- தொழில்நுட்ப கல்வி ஆணையராக வீர ராகவ ராவ் ஐஏஎஸ் நியமனம்
- தூத்துக்குடி ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ் சிப்காட் மேலாண் இயக்குநராக நியமனம்
- திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்.
- விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக ஸ்ருதன்சய் நாராயணன் ஐஏஎஸ் நியமனம்
- ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகராக ரத்தினசாமி ஐஏஎஸ் நியமனம்