வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா:பீஹாரில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம் நடந்துள்ளது.
பீஹார் மாநிலத்திற்கு வடகிழக்கு சூப்பர்பாஸ்ட் எக்ஸ் பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று இரவு ஆனந்தவிகாரில் இரு்நது புறப்பட்டு காமாக்யா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. பாக்ஸார் மாவட்டம் ரகுநாத்புர் ரயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த போது, திடீரென மூன்று ரயில்பெட்டிகள் தடம் புரண்டன.
தகவலறிந்த ரயில் பாதுகாப்பு படை மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால் அவ்வழியாக வரவேண்டிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. உயிர் சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. எனினும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்குவிரைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement