புதுடெல்லி: ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் இந்திய டி.வி நடிகையின் நெருங்கிய உறவினரும், அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த டி.வி நடிகை மதுரா நாயக். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யூதர். இவரது நெருங்கிய உறவினர் ஒதயா மற்றும் அவரது கணவர் ஆகியோரை அவர்களது குழந்தைகளின் கண் முன்பே ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் நடிகை மதுரா நாயக் கூறுகையில், ‘‘எனதுகுடும்பம் சந்தித்துள்ள சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தற்போது இஸ்ரேல் வேதனையில் உள்ளது. ஹமாஸ் கோபத்தால் இஸ்ரேல் தெருக்கள் பற்றி எரிகின்றன. பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் குறிவைக்கப் படுகின்றனர். யூதர்களாக இருக்கும் காரணத்தால் எங்களுக்கு இந்த நிலை’’ என தெரிவித் துள்ளார்.