வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில் காசா நகரில் இருந்து இதுவரை 3.38 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான போர் 6வது நாளை எட்டியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இது தொடர்பாக, ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில் காசா நகரில் இருந்து இதுவரை 3.38 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது காசாவின்
மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதம் ஆகும்.
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசா பகுதியில் பொதுச் சேவைகள் நிறுத்தப்பட்டு, முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போர் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவிக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
காசாவில் உணவு, நீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை அனுமதிப்பது தொடர்பாக இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்துடன் ஐ.நா., பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement