![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697104992_NTLRG_20231012104655872888.jpg)
அமிதாப் பச்சனின் 81வது பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்திய சினிமாவின் 'பிக் பி' என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர் அமிதாப் பச்சன். இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார். 1970களில் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகி, அதனபிறகு சூப்பர் ஸ்டாராகி, இப்போதும் வயதுக்கேற்ற வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இந்த வயதிலும உடல்நலத்திலும், நினைவாற்றலிலும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருக்கிறார்.
அவருக்கு நேற்று 81வது பிறந்த நாள். நாடு முழுவதும் ரசிகர்கள் இதை உற்சாகமாக கொண்டாடினர். நள்ளிரவு 12 மணிக்கு அவரது பங்களாவுக்கு வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடிவிட்டனர். உடனே வெளியே வந்த அமிதாப் பச்சன், ரசிகர்களை சந்தித்தார். கையசைத்து அவர்களின் வாழ்த்தை ஏற்றுக் கொண்டார். அதேபோல நேற்று அதிகாலையும் அமிதாப் வீட்டு முன் ரசிகர்கள் திரண்டனர். அவர்களையும் சந்தித்து நன்றி சொன்னார்.
மும்பை, டில்லி, கோல்கட்டா, உ.பி, பீகார், ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அமிதாப் பச்சன் பெயரில் ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர். மும்பையில் பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமிதாப் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடினர்.