செல்போன் தவல்களை அழித்தது ஏன்? : நவ்தீபிடம் 11 மணிநேரம் விசாரணை

தெலுங்கு சினிமாவில் போதை பொருள் விற்பனையும், பயன்பாடும் அதிகமாகி உள்ளதாக கிடைத்த தவலின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் பல முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது. சிலரை கைதும் செய்தது. இந்த வழக்கு தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் நவ்தீபுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவரது செல்போனை வாங்கி பரிசோதித்த அதிகாரிகள் அதில் இருந்த தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். தகல்கள் மீட்டெடுக்கப்பட்டபோது அதில் போதை மருந்து கும்பலுக்கு நவ்தீப் பணம் அனுப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் நவ்தீபுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதை ஏற்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நவ்தீப் ஆஜரானார். நவ்தீப் தனது வங்கி கணக்கில் இருந்து போதைப் பொருள் சப்ளை செய்தவர்களுக்கு பணம் அனுப்பியது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. சினிமா துறையில் யாரெல்லாம் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் விசாரணை செய்தனர்.

காலை 11 மணியில் இருந்து இரவு வரை 10 மணி வரை நவ்தீப்பிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பல கேள்விகளுக்கு நவ்தீப் பதில் சொல்லாமல் மவுனமாகவே இருந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் நவ்தீப் ஆதாரத்துடன் சிக்கி இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.