Chetak escooter – தமிழ்நாட்டில் பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.15 லட்சம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விலையில் ரூ.1.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சலுகை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் வாகனங்கள் இருப்பு உள்ளவரை மட்டுமே.

Bajaj Chetak

சேட்டக் மாடலில் 3 கட்ட PMSM அதிகபட்சமாக 5 bhp பவர் மற்றும் 20 Nm டார்க் வழங்குகின்றது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ ஆகும். 2.9 kwh பேட்டரி பெற்ற மாடல் சிங்கிள் சார்ஜில் 90 கிமீ ரேஞ்சு வழங்கும். இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும்.

சேட்டக்  மின்சார ஸ்கூட்டரில் ஹில் ஹோல்ட் அசிஸ்ட், கீலெஸ் என்ட்ரி மற்றும் மொபைல் போன் யூஎஸ்பி சார்ஜர் போன்ற பல அம்சங்களுடன் MyChetak ஆப் பயன்படுத்தி ஸ்கூட்டரை உங்கள் மொபைலுடன் இணைக்க முடியும்.

2023 பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ. 1,22,591 ஆகும். சிறப்பு சலுகை இல்லையன்றால் ஆன்-ரோடு விலை ரூ. 1,37,811 (ஆன்-ரோடு தமிழ்நாடு) ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.