![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697131751_NTLRG_20231012114712645639.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் வாய்ப்பு கிடைத்தது : சுருதி பெரியசாமி பேட்டி
விஜய் டிவியின் டாப் ஷோக்களான பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் ஒருமுறை வந்துவிட்டால் கட்டாயம் அவர்களுக்கு சினிமா கதவுகள் திறக்கும் என பலரும் அந்நிகழ்ச்சிகளில் முகம்காட்ட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை உறுதிப்படுத்துவது போல் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான ஸ்ருதி பெரியசாமி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், 'மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் நான் பிரபலம் கிடையாது. ஆனால், இப்போது எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பலர் தங்கள் புரொபைலை எடுத்துக் கொண்டு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நான் யாரிடமும் வாய்ப்புகள் கேட்டு போனதில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் பிக்பாஸ் பார்த்து கிடைத்தது தான்' என்று கூறியுள்ளார்.