துவங்கியது ஆப்பரேசன் அஜெய்: இஸ்ரேலில் இருந்து 230 இந்தியர்கள் வருகை| Operation Ajayi begins: 230 Indians arrive from Israel

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெருசலேம்: இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களை மீட்டு வர ஆப்பரேசன் அஜெய் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 230 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் இந்தியா புறப்பட தயாராகி வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான போர்6-வது நாளை எட்டியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இவர்க சிறப்பு விமானம் மூலம் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வர ”ஆப்பரேன் அஜெய்” எனும் திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.

இதன்படி இன்று இஸ்ரேல் புறப்பட்ட விமானம் நேற்று டெல் அவிவ் நகரில் தரையிறங்கியது. இதையடுத்து முதற்கட்டமாக 230 இந்தியர்களுடன் விமானம் புறப்பட தயாராகி இந்தியா வர உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.