திருப்பதி; தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர்.
திருமலையில் தங்கிய அவர், காலை, ‘அபிஷேக சேவையில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், வேத ஆசீர்வாதம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர். அவற்றை பெற்றுக் கொண்டு,கோவிலை விட்டு வெளியில் வந்த துர்காவுடன், பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அரங்காவலர் குழு உறுப்பினர் பாலு குடும்பத்தினர் உடன் வந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement