வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடும் இலங்கைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் (10) இடம் பெற்றது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடும் இலங்கையர்களின் 213 பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை ஆகியவற்றில் சித்தி மற்றும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார அசாதாரண சூழ்நிலையில் எமது நாட்டுக்கு அந்தியச் செலாவணியை பெற்றுத்தரும் வீரர்களின் குழந்தைகளுக்கு இப் புலமைப்பரிசில் வழங்குவதில் பெருமை அடைவதாகத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி. விமலவீர, உட்பட அமைச்சின் பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.