ராமேஸ்வரம் இன்று மகாளய அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் பொது மக்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது மறைந்த முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. மேலும் ஆடி, தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பார்கள். இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்காகப் பொதுமக்கள் […]