Hero HF Deluxe: ரூ.15 ஆயிரத்துக்கு இந்த பைக்கை வீட்டுக்கு கொண்டு வாருங்கள்..!

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்ட நிலையில் பைக் முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வரை மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  விழா கால விற்பனை படுஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா ஆகியவை எல்லாம் அதிகபட்சம் 95 விழுக்காடு ஆஃபர் கொடுத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆட்டோமொபைல் துறையும் தள்ளுபடிகளை அதிகளவு அறிவித்து வருகின்றன.

பைக் முதல் கார் வரை அனைத்துக்கும் பல்வேறு விழாக்கால சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. தசரா, தீபாவளி மற்றும் ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கார், பைக் வாங்குவதை மக்கள் மங்களகரமானதாக கருதுவதால், இந்த சலுகைகள் அள்ளிவீசப்படுகின்றன. நீங்கள் பைக் அல்லது கார் வாங்க திட்டமிட்டிருந்தால், தாமதிக்க வேண்டாம். குறிப்பாக பண்டிகைகளுக்கு முன் அற்புதமான இந்த பைக்கை வாங்கி வீட்டிற்கு கொண்டு வரலாம். இது ஒரு பொன்னான வாய்ப்பு. 

பெரிய ஆட்டோ நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ, தங்கள் பைக்குகளுக்கு அதிரடி தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது. ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கை மிக குறைந்த விலையில் இப்போது நீங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம். ஷோரூமுக்குப் போய் புதிய பைக் வாங்க முடியாதவர்கள், செகண்ட் ஹேண்ட் ஹீரோ எச்எஃப் வாங்கலாம். இப்படி இந்த பைக் வாங்குவதன் மூலம் பணத்தை சேமிக்கலாம்.

ஷோரூமில் Hero HF டீலக்ஸ் விலை என்ன?

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக்கை ஷோரூமில் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வரலாம். ஆனால் முழு விலையும் கொடுக்க வேண்டும். ஷோரூம் விலை ரூ.65 முதல் 70 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பட்ஜெட்டில் பைக் வாங்குவது பலருக்கு கடினமாக இருக்கும். ஆனாலும் இந்த பைக் வாங்க வேண்டும் என்ற உங்களின் கனவை நனவாக்க முடியும். குறைந்த பட்ஜெட்டில் இருப்பவர்களுக்கு, செகண்ட் ஹேண்ட் பைக்கை வாங்க ஒரு நல்ல விருப்பம் உள்ளது. 

நாடு முழுவதும் இருக்கும் இதுபோன்ற பைக்குகள், பல இணையதளங்களில் விற்கப்படுகின்றன. இந்த வேரியண்ட்டை மிகக் குறைந்த விலையில் வாங்கி வீட்டிற்குக் கொண்டு வர முடியும். அதுவும் நல்ல மைலேஜுடன். ஒரு லிட்டர் எரிபொருளில் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக்கில் 70 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்க முடியும். அதாவது ஒரு கிலோமீட்டரை இரண்டு ரூபாய்க்கும் குறைவான செலவில் கடக்க முடியும். அந்தவகையில், ஹீரோவின் இந்த HF டீலக்ஸ் பைக்கை ரூ.16,000-க்கு ஈபேயில் (eBay) வாங்கலாம். இதைவிட ஒரு சிறந்த வாய்ப்பு இருக்காது. முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்த வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.