பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கொரோனா பொது முடக்க காலத்தில், ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் ஆப்கள் மூலம் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கொரோனா காலத்தில் வருமானத்திற்கு வழியில்லாமல் கஷ்டப்பட்ட நடிகைகளிடம் பணத்தாசை காட்டி, அவர்களை ஆபாச வீடியோவில் நடிக்க வைத்து அதனை வெளிநாட்டு மொபைல் ஆப்களில் ராஜ் குந்த்ரா வெளியிட்டார். இதற்காக கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அமைதி காத்து வந்த ராஜ்குந்த்ரா தனது சிறை வாழ்க்கையை சினிமாவாக எடுக்க முடிவு செய்துள்ளார். UT69 என்று பெயரிட்டுள்ள அப்படத்தில் ராஜ்குந்த்ராவே கதாநாயகனாக நடிக்கிறார்.

அதோடு கதாநாயகியாக சர்ச்சைக்குறிய நடிகை உர்ஃபி ஜாவேத் நடிக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்புதான் ராஜ்குந்த்ராவை உர்ஃபி ஜாவேத், ஆபாச மன்னன் என்று குறிப்பிட்டு இருந்தார். அடுத்த சில நாள்களில் இருவரும் சேர்ந்து நடித்த படம் குறித்த அறிவிப்பு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இருவரும் சேர்ந்து நடிக்க படம் நவம்பர் 3ம் தேதி படம் வெளியாகும் என்று தேதியையும் ராஜ் குந்த்ரா குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் படத்தை யார் இயக்கியது யார் என்ற தகவல் இல்லை. ஆனால் சோசியல் மீடியாவில் வெளியான வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். கடந்த இரண்டு வாரமாக ராஜ் குந்த்ரா படம் குறித்து அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். இது குறித்து ஷில்பா ஷெட்டி இன்னும் எந்த வித கருத்தும் சொல்லவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.