லக்னோ: இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் குசால் பெரேரா அதிகபட்சமாக 78 ரன்களும் நிசங்கா 61 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளும் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
210 ரன் வெற்றி இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஆஸி வீரர்கள் அதிகபட்சமாக இங்க்லிஸ்(58) மார்ஷ் (52) லபுசேன்(40) சேர்த்தனர். மேக்ஸ்வெல்(31) ஸ்டோனிஸ்(20) ஆட்டமிழக்காமல் ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement