இலங்கை கிரிக்கெட் அணி வீரரான தனுஷ்க குனதிலக மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவரது கிரிக்கெட் நடவடிக்கைகள் அனைத்தையும் தடை செய்வதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தனுஷ்க குனதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டிருந்த சுயாதீன விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த பரிந்துரையை அங்கீகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.