விஜய் சேதுபதி தன் தேர்ந்த நடிப்பால் இந்திய சினிமா முழுக்கவே கவனிக்கப் பெற்றவர். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ தொடங்கி `சூப்பர் டீலக்ஸ்’ வரை இவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இடையில் வழக்கமான காலம் காலமாக பார்த்து சலித்த கதைப்போக்கு, காட்சிகள் கொண்ட படத்தில் அவர் நடித்த படங்களுக்கு விமர்சனங்கள் எழுந்தன. அதுகுறித்து அவர் மேல் வைத்த விமர்சனங்களை அக்கறையுடன் கவனிக்கத் தொடங்கியவர் இனி மறுபடியும் விஜய் சேதுபதி படங்கள் என்றால் வித்தியாசமான அனுபவம் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப தயாராகிவிட்டார். அதற்கு ஏற்றபடி அவரது பட லைன் அப்கள் இப்போது அமைந்திருக்கின்றன. தொடர்ந்து சென்னைக்கும், மும்பைக்கும் பயணித்து ‘மேரி கிறிஸ்துமஸ்’ படத்தை முடித்திருக்கிறார். கத்ரீனா கைப்புடன் இவர் இணைந்து நடித்திருக்கிற இப்படம் டிசம்பர் 8-ம் தேதி வெளி வருகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/F8fS2eHa4AAeHMm.jpeg)
இதோடு தனது நண்பர் ஆறுமுகக்குமார் டைரக்ஷனில் மலேசியா போய் ஒரு மாதம் தங்கியிருந்து இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்தார். அதோடு `விடுதலை1′ படத்தில் இறுதியாக படம் முடியும்போது வந்தவர், `விடுதலை 2’வில் பெரும் பத்திரமாக வாத்தியாராக வருகிறார். இதோடு `GANDHI TALKS’ படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. பேசும் படம் வெளிவந்த பிறகு வருகிற மவுனப் படம் இது. இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது. இதில் அவர் நடிப்பை பார்த்துவிட்டு தேசிய விருதுக்குக் கட்டாய வாய்ப்பு இருக்கிறது எனப் பலரும் பாராட்டியிருக்கிறார்கள். இதோடு அவர் கௌரவ வேடத்தில் நடித்த மிஷ்கினின் `பிசாசு 2′ வெளிவருகிறது. அதோடு விஜய் சேதுபதியின் 50-வது படடமான `மகாராஜா’ படம் `குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் டைரக்ஷனில் வெளியிட தயார் நிலையில் இருக்கிறது. `லியோ’ வெளியீட்டிற்கு பிறகு இதன் வெளியீட்டு தேதி ஒழுங்கு செய்யப்படுகிறது.
காக்கா முட்டை மணிகண்டனின் இயக்கத்தில் 10 பாகங்கள் கொண்ட வெப்சீரிஸில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இது மணிகண்டனின் சொந்த கிராமத்தில் எடுக்கப்படுகிறது. இதற்கிடையில் மிஷ்கின், விஜய் சேதுபதி இணையும் பிரம்மாண்ட படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். அதற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Fxi0MYlaYAEWUBd.jpeg)
வழக்கமான மிஷ்கின் படமாக இல்லாமல் இதன் வித்தியாசமே பெரிதும் பேசப்படுமாம். ஒரேயடியாக அந்தப் படத்திற்காக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி. உடம்பை அதிரடியாக குறைத்து, ஒதுக்கி குறைக்கப்பட்ட மீசையில் கெட்டப் மாற்றமும் படத்தில் இருக்கிறது. மேரி கிறிஸ்துமஸ் படத்திற்கு பிறகு தான் அடுத்து இந்தி படம் செய்வது பற்றி முடிவு செய்வாராம்.
இதற்கிடையில் நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா கதை சொல்லி அதற்கும் சம்மதித்து இருக்கிறார். மேற்கண்ட படங்களை முடித்த பிறகு நலன், குமார ராஜா லைனில் வருவார்கள்.