ராமர் கோயிலுக்கு அகில இந்திய தீர்த்த யாத்திரை இன்று துவக்கம்| Akila Bharat Desa Tirtha Yatra starts today

உலகப் புகழ்பெற்ற தெய்வீக நிகழ்வுகளில் ஒரு மைல்கலாக அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் விரைவில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் ராமர் கோவில், ராமாமிர்த தரங்கிணி அறக்கட்டளை சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமி ஆசியுடன் அகில இந்திய தீர்த்த யாத்திரை தமிழகத்தில் இன்று (அக்.17) பயணத்தை துவக்கவுள்ளது.

இதில் நாட்டின் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன்; ராமபிரான் பாதுகா மற்றும் திருவுருவ சிலையுடன் அமைக்கப்பட்ட புனித பெட்டகம் இடம் பெறும்.

இந்த புனித பயணம் உடுப்பி பெஜவார் மடத்தின் மடாதிபதி விஷ்வ பிரசன்ன தீர்த்த ஸ்வாமிஜி, உடுப்பி புத்திகே மடத்தின் மடாதிபதி சுகுனேந்திர தீர்த்த சுவாமிஜி ஆகியோர் முன்னிலையில் ராமஜென்ம பூமி தீர்த்த நிறுவனர் மற்றும் அறங்காவலரும் இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனாலுமான பராசரன் ஆசியுடன் திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுத் தலைவர் சேகர் ரெட்டி துவக்கி வைக்க உள்ளார்..

இந்த பயணத்தில் புனிதபெட்டகமானது பாரதத்தின் ஒரு கோடி வீடுகளுக்கு சென்று மக்கள் வழிபாடு செய்த பின் ஸ்ரீ ராமெஜன்ம பூமி குடமுழுக்கின் போது அயோத்தி சென்றடையும். திறப்பு விழாவை தொடர்ந்து 90 நாட்களில் 108 இடங்களில் 108 நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

108 தெய்வீக திருவிழா தொடர் நிகழ்வின் தொடக்க விழா இன்று அக்டோபர் 17 ல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ராமாமிர்த தரங்கிணி அறக்கட்டளை அகில பாரத தேச தீர்த்த யாத்திரை செய்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.