Honda CB300R: ஹோண்டாவின் சக்திவாய்ந்த பைக்… விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க!

Honda CB300R Bike: ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஹோண்டா CB300R மாடலின் 2023ஆம் ஆண்டு பதிப்பை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. CB300R பைக் சார்ந்த பிரிவில் இதுவே எடை குறைந்த பைக் ஆகும். இதன் எடை 146 கிலோ மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பைக் இரண்டு வண்ண ஆப்ஷனங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த பைக்கில் எமர்ஜென்சி லைட் பிரேக் வசதி உள்ளது. இது தவிர, புதிய பைக்கில் BS6.2/OBD-2 தரநிலையுடன் கூடிய சக்திவாய்ந்த எஞ்சின் உள்ளது. இது இந்திய சந்தையில் கேடிஎம், டியூக் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி போன்ற பைக்குகளுடன் போட்டியிடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2023ஆம் ஆண்டின் ஹோண்டா CB300R மாடல் பைக் வடிவமைப்பு தற்போதுள்ள CB1000R மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிய அளவில் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவ LED ஹெட்லைட் மற்றும் பின்புற லைட் உள்ளது. சிறந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ யூஎஸ்டி முன்புற போர்க் உள்ளது, இது வண்டியை ஓட்ட சிறப்பான அனுபவத்தை வழங்கும். அதே சமயம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, பைக்கில் 220 மிமீ டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.

ஹோண்டா CB300R பைக்கில் ஹசார்ட் ஸ்விட்ச் கிடைக்கிறது. இதனுடன், எமர்ஜென்சி பிரேக் லைட் அம்சமும் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவசரகாலத்தில் பிரேக் பிடிக்கும் போது, பைக்கின் இன்டிகேட்டர்கள் வேகமாக ஒளிரும். இது விபத்துக்கான வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கிறது.

இன்ஜின்

ஹோண்டா CB300R பைக்கில் 286CC சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 31HP Power மற்றும் 27.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இதில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 146 கிலோ என்பதை முன்னரே பார்த்தோம்.

விலை என்ன?

2023 ஹோண்டா CB300R காரின் விலையை ரூ.2.40 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் விலை) நிறுவனம் வைத்துள்ளது. இந்த பைக் பேர்ல் ஸ்பார்டன் ரெட் (Pearl Spartan Red) மற்றும் மேட் மாசிவ் கிரே மெட்டாலிக் (Matte Massive Gray Metallic) வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. CB350 பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கில் 348.36cc 4-ஸ்ட்ரோக் இன்ஜின் உள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்து 807 ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.