வாழ்நாள் முழுக்கக் கஷ்டப்பட்டு உழைச்ச பணத்தைப் போட்டு ஒரு வீடு வாங்குறீங்க. கண்டிப்பா, அந்த வீடு உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கனும்னு பார்த்துப் பார்த்து வாங்க நினைப்பீங்க. அப்படிப் பார்த்து பார்த்து வாங்குற வீடு உயர்தரமான கட்டுமானத்தோட இருக்கும்னு எதிர்பார்ப்பீங்க. தலைமுறை தலைமுறையா வாழவும், நீண்ட கால முதலீடாவும் கருதி வீடு வாங்கற சிலர், வெறும் விளம்பரத்தையும், பில்டர்ஸ் சொல்ற வார்த்தையையும் நம்பி வீடு வாங்கிட்டு கஷ்டப்படறத எத்தனையோ இடங்கள்ல பார்க்குறோம்.
அரசாங்கமும், சட்டமும் நம்மள ஒரு அளவுக்குத்தான் பாதுகாக்கும். அதைத் தாண்டி நாமதான் கவனமா இருக்கனும். தரமான வீடுதானா? என்று பார்த்து வாங்கனும்! தரமான வீடுன்னா, அப்போ அவங்க என்னென்ன பொருட்கள தரமா பயன்படுத்திக் கட்டியிருக்காங்க?-னு வீட்ட உடைச்சி பார்த்தா வாங்க முடியும்?
வீடு வாங்குறது Next’u,
எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுங்க First’u
எக்ஸ்பீரியன்ஸ் எப்படிப் பண்ண முடியும்?? ஏன் முடியாது? நீங்க வாங்கப் போற வீட்ட நீங்க உடைக்க வேணாம். அவங்களே உடைச்சி வச்சிருக்காங்க.. அத போய்ப் பார்த்தே வீடு வாங்கலாம். என்ன… வீட்ட உடைச்சி வச்சிருக்காங்களா..? Sweet Stall-ல லட்டை உடைச்சிப் பார்த்து வாங்கிருக்கோம்.. வெண்டைக்காயை உடைச்சி வாங்கிருக்கோம் இன்னும் ஒரு படி மேல போய் பைக்கை பார்ட் பார்ட்டா கழட்டிப் பார்த்துக்கூட வாங்கிருக்கோம். ஆனா, அது எப்படி வீட்ட உடைச்சி பார்த்து வாங்குறது? ஆச்சரியமா இருக்குல்ல! இதைப் பற்றி DAC Developers-ன் நிர்வாக இயக்குனர் சதீஷ் குமார் விளக்கமாகக் கூறியிருக்கிறார்.
அது என்னப்பா Experience centre?
தென்னிந்தியாவிலேயே முதன்முறையா வாடிக்கையாளர்களுக்கு, தாங்கள் என்னத் தரத்தில் வீடு கட்டித் தராங்கன்னு பார்ட் பார்ட்டா… லேயர் லேயரா… உடைச்சிக் காட்டுறாங்க DAC Developers. பார்ட் பார்ட்டாக இருக்கும் இதற்குப் பெயர் தான் Experience centre. இவங்க கிட்ட நீங்க வாங்கப் போற வீட்டோட வெளிப்புறம் எப்படி இருக்கும்னு காட்ட டெமோ வீடு ஒன்றையும். வீட்ட உடைச்சி பார்த்தா உட்புறம் எப்படி இருக்கும்னு காட்ட பக்கத்துலயே Experience centre ஒன்றையும் வச்சிருக்காங்க. அதனால வாடிக்கையாளர்களுக்கு DAC Developers பயன்படுத்துகிற சிமெண்ட் என்ன? வயர் என்ன? பைப் என்ன? அவற்றின் தரம் எவ்வாறு இருக்கும் என்று இதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வர முடியும்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கள்ல..?
Experience centre என்கிற கான்செப்ட் முதன்முதலாக துபாயில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து பல நாடுகளில் இதனை ஆரம்பித்திருந்தாலும் தென்னிந்தியாவில் DAC Developers தான் முதன்முதலாக மேடவாக்கத்தில் Experience centre-ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காகப் பல நாடுகளுக்குச் சென்று, அங்கெல்லாம் மக்களுக்கு பில்டர்ஸ் என்னென்ன மாதிரியான மெட்டீரியலைப் பயன்படுத்தி வீடு கட்டிக்கொடுக்கிறார்கள் என்று பார்த்து தெரிந்துகொண்டு, நம் ஊரிலும் இதுபோல ஒரு செட் அப் வேண்டும் எனக் கட்டி இருக்கிறார்கள். இதனைக் கட்டி முடிக்க இவர்களுக்கு 6 மாதங்கள் ஆகிருக்கிறது. Experience centre அறிமுகப்படுத்துவதன் முதன்மை நோக்கமே, வாடிக்கையாளர்களிடம் இவர்கள் கொண்டிருக்கும் வெளிப்படைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் உணர்த்துவதற்குத்தான்.
சரிப்பா, அதுனால மக்களுக்கு என்ன கிடைச்சிருக்கு?
வீடு வாங்கப் போகிறோம் என்று முடிவெடுத்த பின்னர் பல இடங்களைப் பார்த்து விலை, லொக்கேஷன், வீட்டு மாடல் எனப் பலவற்றையும் கழுகுப் பார்வையில் பார்ப்போம். ஆனால், வாங்கப் போகும் வீட்டிற்கு என்ன பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், கட்டுமானம் என்ன தரத்தில் இருக்கிறது என்பதில் பலரும் கோட்டை விட்டுவிடுவோம். அந்தக் குறையைத்தான் இந்த Experience centre நிவர்த்தி செய்கிறது. இங்கு வீடு கட்ட பயன்படுத்தப்படும் RAW மெட்டீரியல் அனைத்தையுமே க்ராஸ் செக்க்ஷன் செய்து காண்பிப்பதால், நம் கனவு வீட்டில் என்னென்ன இருக்கப் போகிறது, அவை எவ்வளவு தரமானவை தெளிவும் நம்பிக்கையும் நமக்கு வந்து விடுகிறது. ஆகவே, வீடு வாங்கும் கனவில் இருப்பவர்கள், ஒரு முறை இந்த Experience centre-ஐ சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான், இனி வீட்டை வாங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்ற தெளிவு நம் அனைவருக்கும் வரும் என்பது உறுதி.
வீடு கட்டிக்கிட்டு இருக்கும்போதே வித்துடும்!
Experience centre மூலம் வாடிக்கையாளர்களிடம் உருவாக்கியுள்ள நம்பகத்தன்மையின் காரணமாக DAC Developers-ல் கட்டி முடித்த வீடுகள் விற்பனைக்கு இருக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவுதான். காரணம், தாங்கள் கட்டிக்கொண்டிருக்கும் வீடு எவ்வாறு இருக்கும் என்பதை வாடிக்கையாளருக்கு Experience centre-ன் மூலம் வெளிப்படையாக விளக்கி விடுவதால் இவர்கள் வீடுகளைக் கட்டிக்கொண்டிருக்கும்போதே பெரும்பாலான வீடுகள் விற்பனையாகி விடுகின்றன.
இடங்களுக்கு ஏற்றவாறு தீம் பேஸ் வீடுகள்!
இவர்கள் அப்பார்ட்மென்ட்டை கட்ட தேர்ந்தெடுக்கும் லொக்கேஷனையும், வாங்கப் போகும் வாடிக்கையாளர்களையும் பொருத்து பல தீம்களை அடிப்படையாகக் கொண்ட வீடுகளைக் கட்டி விற்பனை செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக மேடவாக்கத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் DAC Medallion ப்ராஜெக்டில் ரோம் நகர தீமை அடிப்படையாகக் கொண்டு டிசைன் செய்து கட்டுகிறார்கள். அதே போலத் தங்களுடைய ஒவ்வொரு ப்ராஜெக்ட்டிலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் அடிப்படையில் பிரான்ஸ், இத்தாலி என்று தீம் உருவாக்கிக் கட்டுகிறார்கள்.
உங்களுக்குத் தெரியாம ஓடவும் முடியாது… Raw மெட்டீரியல ஒளிக்கவும் முடியாது…
நம்ம தனி வீடா கட்டும்போது என்ன மணல் வாங்கிக் கட்றோம், என்ன கம்பி வாங்கிக் கட்றோம்னு இஞ்ச் இஞ்ச்சா தெரியும்.. ஆனா, அப்பார்ட்மென்ட்டா வாங்கும்போது என்ன பொருள் போட்டுக் கட்றாங்கனு பெரும்பாலானோருக்கு தெரிவதே இல்லை. DAC Experience Center ல் Bay எனப்ப்டும் 11 பிரிவுகள் இருக்கு! ஒவ்வொரு பிரிவும் வீட்டின் முக்கியப் பகுதிகளை உடைச்சு வச்சு உண்மையைக் காட்டுது! அந்தப் பிரிவுகள் பத்தி இப்போ பாப்போம்.
பில்டிங்கும் ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங்கு…
சொந்தக்கால்ல திடமா நின்னு சம்பாரிச்ச காசுல வாங்குன வீட்டோட பேஸ்மெண்ட் (Basement) எவ்ளோ திடமா இருக்கனும். இங்க, பேஸ்மெண்ட் எவ்வளவு தடிமனாக இருக்கும்? ஷியர் வால் (Sheer Wall) எனப்படும் பேஸ்மெண்ட் கடைக்காலுக்கு என்ன ப்ராண்ட் கம்பி பயன்படுத்துகிறார்கள் என்று வெளிப்படையாக இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஷியர் வால் பூகம்பம் வந்தாலும், பலமான காற்று அடித்தாலும், பெரிய அதிர்வுகளை பில்டிங் எதிர்க்கொண்டாலும் பில்டிங்கிற்கு ஒன்றும் ஆகாதபடி தாங்கிப் பிடித்துக்கொள்ளும் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டிருக்கிறது.
காலமும்(column) , சீலிங்கும் எப்படி ஒட்டியிருக்கு?
வீடு கட்டும்போது காலத்துடன் சீலிங் எவ்வாறு இணைக்கப்பட்டிருக்கிறது? காலத்திற்கு எவ்வளவு தடிமனான கம்பி பயன்படுத்துகிறார்கள்? சீலிங்கிற்கு என்ன கம்பியும் எவ்வளவு தடிமனாகக் கான்கிரீட்டும் போடுகிறார்கள் என்று உடைத்து வாடிக்கையாளர் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
கல்லும் காலமும் சேரலன்னா விரிசல் தான்..!
வீட்டை என்ன கல்லைக் கொண்டு கட்டியிருக்கிறார்கள் என்று காட்டப்படுகிறது. மேலும் கல்லும் காலமும் சந்திக்கும் இடம் பல நேரங்களில் ஒட்டாமல் விரிசல் விட்டு வாடிக்கையாளர்களைப் பயமுறுத்திவிடுகிறது. அதற்கு பிரத்யேகமாக “மெஷ்” என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காலத்தையும், கல்லையும் இணைத்து விரிசலை தடுக்கிறார்கள். அதற்கு மேலாக ப்ளாஸ்டிரிங் செய்து சுவரை பூசுகிறார்கள். கட்டும் கல் முதல் மேற்பூச்சு வரை லேயர் பை லேயராகப் பிரித்துக் வைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்விட்ச்ல எது ஃபேனுக்கு, எது லைட்டுக்கு…
பொதுவா நம்ம வீடு வாங்கி உள்ள போனதும், எந்த ஸ்விட்ச் ஃபேனுக்கானது, எந்த ஸ்விட்ச் லைட்டுக்கானது அப்படினு மண்டைய போட்டு குழப்பிக்கிட்டு கடைசில அந்த ஸ்விட்ச்லயே ‘F’, ‘L’னு எழுதி வச்சிக்குவோம். ஆனா, இங்க Distribution பாக்ஸ், என்னென்ன வயர், ஸ்விட்ச் பாக்ஸ் உள்ளே எப்படி இருக்கும், என்னென்ன மாதிரியான ஸ்விட்ச் பயன்படுத்திருக்கிறார்கள் என வெளிப்படையாக வைத்திருக்கிறார்கள்.
மேலும், இண்டர்நெட் கனெக்ஷன், கேபிள் டிவி, டிஷ் ஆன்டெனா போன்ற வயர்களுக்குத் தனி வழியும் வீட்டிற்கான கரெண்ட் வயர்களுக்குத் தனி வழியும் என்று தனித்தனியாகத் திட்டமிட்டு டிசைன் செய்திருக்கிறார்கள். இதற்கென தனியாக MEP என்ற என்ஜினீயர் இவற்றை டிசைன் செய்து தருகிறார்.
கதவுக்குள்ள என்ன இருக்கு..?
கதவிற்கு பின்னால யார் இருக்கானு திறந்து பார்த்துதானே நமக்குப் பழக்கம். இங்கு, கதவையே திறந்து அதில் என்ன இருக்கிறது என நமக்குக் காட்டுகிறார்கள். மூன்று லேயர்களாக ஸ்ட்ராங் மெட்டீரியலில் கதவு உருவாக்கப்படுகிறது. இது, வீட்டிற்கு வெளியே இருந்து பாதுகாக்கும் மெயின் மெம்பர் என்பதால் வெயிலிலும் மழையிலும் தாங்கும் தன்மையில் கதவுக்கான மெட்டீரியல் குவாலிட்டியை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஜன்னல் கண்ணாடி உடைந்து உதிராது…
இதுவரை நாம் விளையாடிய கிரிக்கெட் பால் எத்தனை ஜன்னல் கண்ணாடியை உடைத்து சிதற வைத்திருக்கிறது. ஆனால், இங்கு இருக்கும் ஜன்னல் கண்ணாடி தெறிக்காமலும் உடைந்து உதிராதபடியான குவாலிட்டியிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும், ஜன்னலையே உடைத்து க்ராஸ் செக்ஷனில் காட்டிருப்பதால், ஜன்னல் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
இது துருப்பிடிக்காது…
பால்கனியில் பல காலநிலைகளைச் சந்திக்கும் ஹேண்ட்ரைல்ஸை (Handrails) எம்.எஸ் ஸ்டீலால் எவ்வளவு உயரமாகக் கட்டுவார்கள், அது துருப் பிடிக்காதபடி அதற்கு முதலில் அடிக்கப்படும் ஆண்டி கரோஷன் ஜிங்க் ப்ரைமர் ஒரு லேயர் மற்றும் பெயிண்ட் ஒரு லேயர் எனத் தெளிவாகக் காட்டப்படுகிறது.
தரையில தானே எல்லாமே இருக்கு…
தரையை நான்கு லேயரில் வெட்டி தெளிவாகக் காட்டுகிறார்கள். முதல் லேயராக ஃப்ளோர் ஸ்லாப் ( Floor slab), இரண்டாவதாகச் சிமெண்ட் மோர்டர் (cement mortar), மூன்றாவதாக தின்செட் லேயர் (Thinset layer), நான்காவதாக டைல்ஸ் (Tiles) என அனைத்து லேயரையும் பிரித்து வெட்டிக் காட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் நம்ம வாங்கப் போற வீட்டு தரை எப்படி இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
பாத்ரூம் டூர்…
வீட்டின் முக்கியமான இடம் பாத்ரூம். அதிகப் பிரச்னை உண்டாகக்கூடிய இடமும் அதுதான். பைப்பில் தண்ணீர் லீக் ஆகிறது, வாஷ் பேசினில் தண்ணீர் வடிகிறது, தண்ணீர் தரையிலேயே நிற்கிறது எனப் பல பிரச்னைகள் கொண்ட இடம். எனவே இதில் அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறார்கள்.
தரை நான்கு லேயரில் போட்டிருக்கிறார்கள். வேஸ்ட் வாட்டர் வெளியே செல்லும் வண்ணம் பள்ளமான ஸ்லோப் இருக்கிறது. ரெஸ்ட்ரூம் க்ளாசெட்டையும் க்ராஸ் செக்ஷனில் வெட்டி அதை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.
தளத்துல என்ன இருக்கு..?
மாடி ரொம்ப முக்கியமான ஏரியா.. அங்க மட்டும் தண்ணீர் நின்னுச்சி… வீட்டோட சீலிங் ஏரியாவை வீணடித்து வீட்டையே உருக்குலைத்துவிடும். எனவே அங்கு Water proofing layer போடப்பட்டிருக்கிறது. மேலும் தனிக் கவனம் கொடுத்து வெயிலை உள் இழுக்காத, தண்ணீரைத் தேங்க விடாத வண்ணம் Weather proof tiles-ம் பயன்படுத்திருக்கிறார்கள். இந்த செட்அப் எவ்வாறு இருக்கும் என அங்கு காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கோடையில் ஜில்லென்றும், மழைநாட்களில் கதகதப்பாகவும் வீடு இருக்கும்.
குழாய்களின் அமைப்பு…
மெட்ரோ தண்ணீருக்கும், போர் தண்ணீருக்கும் தனித்தனி குழாய்கள் அமைத்திருக்கிறார்கள். மேலும், மழைநீரை கீழிறக்கவும், வேஸ்ட் வாட்டர், ட்ரைனேஜ் குழாய் என தனித்தனியாகச் சீராகத் திட்டமிட்டு வடிவமைத்திருக்கிறார்கள். மேலும், இந்த அனுபவ மையத்தில் ஒலிச் சுற்றுலாவும் (Audio Tour) அமைச்சிருக்காங்க! அது நீங்க உள்ள நுழைஞ்சதில் இருந்து, ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியா விளக்குது ! ஆங்கிலம் பற்றும் தமிழில் இந்த விளக்கம் இருக்கு! அதுனால ஒவ்வொரு பிரிவையும் பத்தி வாடிக்கையாளர் நல்லா புரிஞ்சிக்க முடியும்.
எண்ணத்தை பிரதிபலிக்கும் வண்ணம் முக்கியமில்லையா…!
வீட்டிற்குள் எத்தனை லேயரில் பெயிண்ட் அடிக்கப் போகிறோம் என வண்ணம் தீட்டி வாடிக்கையாளர் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. உட்புறம் சிமெண்ட் சுவர், பட்டி, ப்ரைமர், பெயிண்ட் என நான்கு லேயரும் காட்டப்படுகிறது. வெளிப்புறம் சிமெண்ட், வாட்டர் ப்ரூஃப் என இரண்டு லேயரில் காட்டப்படுகிறது.
ஒரு சிவில் என்ஜினீயராக மக்களுக்குத் தரமான வீட்டை வழங்குவதற்காகத் தான் DAC Developers தொடங்கப்பட்டிருக்கிறது. அதன் அடையாளம்தான் இந்த Exprience centre என்கிறார் நிர்வாக இயக்குனர் சதீஷ் குமார்.