China removes Israel from online map; What is the reason? | ஆன்லைன் மேப்பில் இஸ்ரேலை நீக்கியது சீனா; காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பீஜிங்: சீனாவின் பைடு மற்றும் அலிபாபா நிறுவனங்களின் ஆன்லைன் மேப்களில் இஸ்ரேல் பெயர் நீக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 20க்கும் மேற்பட்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் சீன நிறுவங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இருப்பினும், பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேச நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து அலிபாபா மற்றும் பைடு நிறுவனங்கள் இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காத சீனா, பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அளிப்பதே தீர்வு எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.