கோல்கட்டா: பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (அக்.,31) நடக்கும் லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.
இரு அணிகளுக்கும் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுவர இப்போட்டியில் வெற்றிப்பெற போராடுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement