வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பாஜ.,வின் மிரட்டல்களுக்கு “இண்டியா” கூட்டணி அஞ்சாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அதானியைக் காப்பாற்றி, ஜனநாயகத்தை அழிப்பதே பாஜ.,அரசின் ஒரே நோக்கம். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களை உளவு பார்க்க முதலில் ‘பெகாசஸ்’ என்ற மென்பொருளை பயன்படுத்தினர்.
இப்பொது வேறு சில வழிகளில் மீண்டும் எதிர்க்கட்சி மொபைலை ஓட்டு கேட்கும் பணியை துவக்கி உள்ளனர். இண்டியா கூட்டணி இது போன்ற மிரட்டல்களுக்கு அஞ்சாது. இவ்வாறு அந்த பதிவில் கார்கே கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement