பெங்களூரு ; ”பா.ஜ.,வினர் சொன்னவுடன் ஆட்சி கவிழ்ந்துவிடாது. எங்கள் அரசு பலமாக உள்ளது,” என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் 39வது நினைவு நாள் நிகழ்ச்சி, பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவரது உருவ படத்துக்கு, முதல்வர் சித்தராமையா மலர் துாவினார்.
பின் அவர் பேசியதாவது:
இந்திரா மிகவும் துணிச்சலான பெண். அவரை போன்ற பிரபலமான பிரதமர் யாரும் இல்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வரலாறு பா.ஜ.,வுக்கு இல்லை.
வெற்று தேசபக்தி பற்றி மட்டுமே பேசுகின்றனர். இது போன்ற பேச்சுகளால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதுவும் கிடைக்காது. பா.ஜ.,வினர் சொன்னவுடன் ஆட்சி கவிழ்ந்து விடாது. காங்கிரஸ் அரசு பலமாக உள்ளது.
மகாத்மா காந்தி, இந்திரா, ராஜிவ் ஆகியோரின் படுகொலை, நாட்டிற்கு நேர்ந்த மிகப்பெரிய இழப்பு. இம்மூவரும் நாட்டுக்காக தியாகிகளாகினர். நாட்டுக்காக செய்த தியாகங்கள், நம் நாட்டு மண்ணில் பதிவாகி உள்ளது.
நேற்று சர்தார் வல்லபபாய் பிறந்த நாள். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில், அவரது பங்களிப்பு மகத்தானது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement