கொல்கத்தா பாஜக அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியதற்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த வழக்கு பற்றி மஹூவா மொய்த்ரா கருத்து தெரிவித்துள்ளார். ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், மோடி, அதானி ஆகியோர் மீதும் கடுமையான வாதங்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்பவர்களில் முக்கியமானவர், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆவார். நாடாளுமன்றத்தில் இவர் அதானி குறித்துக் கேள்வியெழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் பணம், பரிசுப்பொருள்களை லஞ்சமாகப் பெற்றதாக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துப்பே பகிரங்கமாக்க குற்றம் சாட்டினார். மக்களவை […]