World Cup semi-finals: உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்!

World Cup semi-finals: செவ்வாயன்று நடந்த ஐசிசி உலகக் கோப்பையின் 2023 போட்டியில் பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது.  ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக மிகவும் அவசியமான வெற்றியுடன் அதன் தொடர் தோல்விகளை முடித்துக்கொண்டது. ஐசிசி உலகக் கோப்பையின் 31வது ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்தை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வென்றது.  ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு சுருண்டது. 74 பந்துகளில் 81 ரன்கள் குவித்த ஜமானின் அபாரமான ஆட்டத்தால், பாகிஸ்தான், வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பையின் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.  இந்த தோல்வியின் மூலம், அரையிறுதிப் போட்டியில் இருந்து வங்கதேசம் வெளியேறியது.

பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புகள் என்ன?

அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன.  பங்களாதேஷ் அணிக்கு எதிரான அபரா வெற்றி பாகிஸ்தானின் நிகர நெட் ரன் ரேட் விகிதத்தை மேம்படுத்த உதவியுள்ளது.  -0.024 ரன் ரேட் உடன் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை விட இரண்டு புள்ளிகள் பின்தங்கி உள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா பாகிஸ்தானை விட நான்கு புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.  

ஐசிசி உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் தற்போதைய டேபிள்-டாப்பர்களான இந்தியா முதல் இடத்தில் உள்ளது.  6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.  தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அரையிறுதிக்கு தகுதி பெற, இந்தியா (99%), தென்னாப்பிரிக்கா (98%), நியூசிலாந்து (85%), ஆஸ்திரேலியா (84%) வாய்ப்புகள் உள்ளன.  இருப்பினும், பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா அணி ஒரு சில போட்டிகளில் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்புகள் உள்ளது.  பாகிஸ்தான் மீதமுள்ள 2 போட்டிகளில் நல்ல நெட் ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறலாம். பாகிஸ்தான் அடுத்ததாக நியூசிலாந்து (சனிக்கிழமை) மற்றும் இங்கிலாந்தை (நவம்பர் 11) அணியுடன் விளையாட உள்ளது.

இந்தியா அடுத்ததாக வியாழக்கிழமை ஸ்ரீலங்கா அணியுடன் விளையாட உள்ளது.  கடைசியாக ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதியது.  அதில் இலங்கை அணியை சிராஜ் பதம் பார்த்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க இலங்கை தயார் ஆகி வருகிறது.  மறுபுறம் இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக இஷான் கிஷன் இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  மிடில் ஆர்டரில் ஐயர் ரன்கள் அடிக்க சிரமப்படுவதால் இந்தியா பேட்டிங் சற்று சொதப்பலாக உள்ளது.  இதனால் அணியில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்தும் இன்னும் தகவல் கிடைக்கவில்லை.  இதனால் இலங்கை அணிக்கு எதிராக ஹர்திக் விளையாடுவது சந்தேகம் தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.