சென்னை: தீபாவளிக்கு பிறகு பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் கூறினார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளராக குமரகுருபரன் நியமனத்தைத் தொடர்ந்து, துறை சார்ந்த அறிமுகக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளித் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகள் தொடர்பான அட்டவணை தீபாவளி பண்டிகை முடிந்ததும் வெளியிடப்படும் என்றார். மேலும், ‘டெட்’ தேர்வில் […]