MCA Pune Pitch Report: உலகக் கோப்பை 2023 (ICC Men’s Cricket World Cup) தொடரில் நடக்கவுள்ள இன்றைய (நவம்பர் 01, 2023, புதன்கிழமை) 32 வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி புனேவில் உள்ள MCA ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் அதே வேளையில் டாஸ் அரை மணி நேரத்திற்கு முன்னதாக போடப்படும்.
உலகக் கோப்பை 2023 தொடரில் இரு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்த இந்தப் போட்டி முக்கியமானது. இத்தகைய சூழ்நிலையில், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றிபெற தங்களால் இயன்றவரை முயற்சி செய்வார்கள். இந்த உலகக் கோப்பை 2023 பொறுத்தவரை இரு அணிகளும்பலம் வாய்ந்த அணியாக இருப்பதால், இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.
விளையாடும் 11 பேர் யார்?
அதேநேரத்தில் இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள், பந்து வீச்சாளர்கள் இருப்பதால் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் யார் வெற்றி பெருவார்கள் என்பதை கணிப்பது கடினமானதாக இருக்கும். இருப்பினும், புனே ஆடுகளம் யாருக்கு உதவும் என்பதை கருத்தில் கொண்டு அணியில் விளையாடும் 11 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இது முக்கியமான வேண்டிய ஒன்றாக இருக்கும்.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஸ்டேடியம் யாருக்கு சாதகம்?
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (Maharashtra Cricket Association Stadium Pune) மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. உலகக் கோப்பைக்கு முன் இங்கு விளையாடிய ஏழு போட்டிகளில், ஐந்து முறை 300க்கும் அதிகமான ஸ்கோர்கள் அடிக்கப்பட்டன. இருமுறை 300க்கும் மேற்பட்ட இலக்குகள் துரத்தப்பட்டன. அதேசமயம், இந்த மைதானத்தில் நடந்த 2023 உலகக் கோப்பையைப் போட்டியை பற்றி பேசுகையில், முதலில் பேட்டிங் செய்யும் அணிகளால் பெரிய ஸ்கோர் எட்ட முடியவில்லை. வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை.
நியூசிலாந்து Vs தென்னாப்பிரிக்கா போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்
நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா (New Zealand vs South Africa) அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய விரும்பும். இந்த ஆடுகளம் 100 ஓவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணி சிறப்பாக விளையாடினால் 300க்கு மேல் ரன் குவிக்க முடியும். மாலையில் வானிலை சற்று குளிர்ந்தால், பந்து வீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்யும் அணி சிக்கலை சந்திக்க நேரிடும்.
அரையிறுதி வாய்ப்பு: இரு அணிகளுக்கும் வெற்றி மட்டுமே குறிக்கோளாக இருக்கும்
2023 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் நியூசிலாந்து அணி 6 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் அரையிறுதிக்கு செல்வதற்கு வெற்றியைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டியில் யாருக்கு அதிக வெற்றி யாருக்கு?
இரு நாடுகளும் 50 ஓவர் போட்டியில் 71 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் நியூசிலாந்து 25 முறையும், தென்னாப்பிரிக்கா 41 முறையும் வென்றுள்ளது. ஐந்து போட்டிகள் எந்த முடிவையும் தரவில்லை.
நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா: ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக வெற்றி யாருக்கு?
இரு தரப்பும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் எட்டு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் நியூசிலாந்து ஆறு முறையும், தென்னாப்பிரிக்கா இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.