வரும் நவம்பர் 7 ஆம் தேதி துவங்குகின்ற EICMA 2023 மோட்டார் ஷோவில் ஹீரோ மோட்டோகார்ப், Xoom 160 என்ற பெயரில் மேக்ஸி ஸ்டைல் கொண்ட ஸ்கூட்டரை வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையிலான டீசரை வெளியிட்டுள்ளது.
மேக்ஸி ஸ்கூட்டரை தவிர ஜூம் 125 மற்றும் புதிய ஸ்கூட்டர் கான்செப்ட் என மொத்தமாக மூன்று மாடல்கள் தவிர 440சிசி என்ஜின் பெற்ற பைக்குகளை வெளியிட வாய்ப்புள்ளது.
Hero Xoom 160 Maxi-Scooter
வெளியிட்டுள்ள டீசர் படத்தின் மத்தியில் உள்ள மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டர் இந்தியாவில் கிடைக்கின்ற யமஹா ஏரோக்ஸ் 155 , ஏப்ரிலியா SXR 160 போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில் ஸ்போர்ட்டிவ் ஃபெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய 160cc என்ஜினை பெற வாய்ப்புள்ளது.
அடுத்து, ஜூம் 110 ஸ்கூட்டரின் அடிப்படையான வடிவமைப்பினை பகிர்ந்து கொள்ள உள்ள 125சிசி என்ஜின் பெற உள்ள ஜூம் 125 ஆனது புதுபிக்கப்பட்ட ஹெட்லைட், நேர்த்தியான பேனல்கள் ஸ்போர்ட்டிவான தோற்றத்தை வெளிப்படுத்தும் அமைப்பினை கொண்டிருக்கலாம். இதில் 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.
அடுத்து, இந்த டீசரில் மற்றொரு ஒற்றை இருக்கை பெற்ற ஸ்கூட்டரும் உள்ளது. அதன் விபரங்கள் EICMA அரங்கில் வெளிவரக்கூடும். இதுதவிர , ஹீரோ மோட்டோகார்ப் பிரீமியம் பைக்குகளை கொண்டு வரவுள்ளது.