பாங்காக் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணியருக்கு விசா தேவையில்லை, என, தாய்லாந்து அரசு அறிவித்து உள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது சுற்றுலாத்துறை.
இத்துறையை நம்பி அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளது.
தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் பட்டியலில், மலேஷியா, சீனா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
நடப்பாண்டில் மட்டும், 12 லட்சம் இந்தியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு விசா தேவையில்லை என, அந்நாட்டு அரசு நேற்று அறிவித்துள்ளது.
மேலும், சுற்றுலா வரும் இந்தியர்கள் விசா இல்லாமல், 30 நாட்கள் தங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதே போல், கிழக்காசிய நாடான தைவானில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கும் விசா தேவையில்லை என, தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று துவங்கி, அடுத்தாண்டு மே மாதம் வரை அமலில் இருக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement