புனே: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது.
இந்தியாவில் 13வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இன்று (நவ.,1) புனேயில் நடக்கும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடங்களில் உள்ள தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. நியூசி., அணியில் பெர்குசனுக்கு பதிலாக டிம் சவுதி சேர்க்கப்பட்டார். தென் ஆப்ரிக்கா அணியில் ஷம்சிக்கு பதிலாக ரபாடா சேர்க்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement