சூர்யகுமார் யாதவ் எடுத்த புதிய அவதாரம்… ஷாக் ஆன ஜடேஜா – வீடியோவை பாருங்க!

Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளன. அரையிறுதிக்கான ரேஸில் அனைத்து அணிகளும் உள்ளன. இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் அதன் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி கனவில் இன்னும் உள்ளன. 

இருப்பினும், இந்தியா (Team India), தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேதான் அரையிறுதிப்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பினால் மட்டுமே மற்ற அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு வரும். எனவே, ஒவ்வொரு போட்டியும் மிக முக்கிய போட்டியாக மாறியுள்ளது. 

இன்றைய தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து (SA vs NZ) போட்டி, நாளைய இந்தியா – இலங்கை (IND vs SL) போட்டிகளை மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மற்ற அணிகளை விட இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டியிலும் வென்றுள்ளது. நாளை இலங்கை அணியை இந்தியா மும்பை வான்கடேவில் சந்திக்க உள்ளது. மும்பை தற்போதுள்ள பல வீர்ரகளுக்கு சொந்த ஊராகும். 

குறிப்பாக, ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோரை சொல்லலாம். வீரர்கள் அனைவரும் போட்டிக்கு கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பயிற்சிக்கு நடுவே சூர்யகுமார் யாதவ் ரிலாக்ஸ் செய்யும் வகையில் தொலைக்காட்சி சேனலின் கேமராமேனாக மாறி மும்பை மரைன் டிரைவ் பகுதியில் மக்களிடையே கலந்துரையாடிய சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவை பிசிசிஐ அதன் சமூக வலைதளங்களில் வெளியிட்டது. 

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by Team India (@indiancricketteam)

அதில் குறிப்பாக, ஒளிப்பதிவாளர் வேடத்தில் நடிக்கும் போது, சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) முழுக் கை சட்டை, கண்ணாடி மற்றும் தொப்பி அணிந்து தனது அடையாளத்தை முழுமையாக மறைத்தார். குறிப்பாக, முகத்தில் முகக்கவசம் அணிந்து யார் என்றே தெரியாத அளவில் இருந்தார். அடையாளம் தெரிகிறதா என்பதை சோதித்து பார்க்க ஜடேஜாவிடம் (Jadeja) சென்றபோது, அவருக்கு சூர்யகுமாரை அடையாளமே தெரியவில்லை. 

அதைத் தொடர்ந்து, மும்பை மரைன் டிரைவில் மக்களிடம் இந்திய அணி குறித்து சூர்யகுமார் யாதவ் ஒளிப்பதிவாளராக கேள்வி எழுப்பினார். பலரும் ரோஹித் சர்மா, விராட் கோலி, சிராஜ் குறித்து பேசினர்.  அப்போது, ஒரு பெண் ரசிகர்,”சூர்யகுமார் யாதவ் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு முறையும் அவர் விளையாடுவதைப் பார்க்கும்போது, அவர் எப்படி இந்த ஷாட்களை அடிக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவரை அதனால்தான் Mr.360 என்று அழைக்கிறார்கள். அவர் விளையாடுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன், அவருக்கு வான்கடேயில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார். 

உடனே அவரின் அருகே சென்று முகக் கவசத்தை எடுத்து தான் யார் என்பதை ரசிகரிடம் வெளிப்படுத்தினார். அந்த ரசிகர் சூர்யகுமாரை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யத்தில் வியந்தார் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அத்துடன் சூர்யகுமார் அந்த இடத்தில் புறப்பட்டார், பலரும் சூர்யகுமார் பொதுவெளியில் நடந்து செல்வதை கண்டு வியந்து நின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.