உலகக் கோப்பை: அரையிறுதிக்கு செல்ல இந்த அணிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கு..!

உலக கோப்பை லீக் சுற்றில் இன்னும் 14 போட்டிகள் எஞ்சியுள்ளன. இதனால் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது உலக கோப்பை. 4 அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில், 9 அணிகளுக்கும் இப்போதைக்கு ஏதாவதொரு வாய்ப்பில் நீடிக்கின்றன. உறுதியாக சொல்வதென்றால் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு மட்டுமே வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. மற்ற 2 இடங்களுக்கு தான் எஞ்சியிருக்கும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. வங்கதேசம் அணி முதலாவதாக இந்த உலக கோப்பையில் இருந்து வெளியேறியிருக்கும் நிலையில், அரையிறுதி வாய்ப்பு எந்தெந்த அணிகளுக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

இந்தியா

புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 3 போட்டிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அதில் தோல்வியை தழுவினால் கூட இந்திய அணி 4வது இடத்திலேயே நீடிக்கும். அதானால் இந்திய அணியின் உலக கோப்பை அரையிறுதி வாய்ப்பு என்பது வெகு பிரகாசமாகவே இருக்கிறது. 

தென்னாப்பிரிக்கா

உலக கோப்பை புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து அணியிடம் மட்டும் தோல்வியை தழுவி அதிர்ச்சியை கொடுத்தது. இருப்பினும் அந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து இப்போது பலம் வாய்ந்த அணியாகவும், அரையிறுதி வாய்ப்பில் உறுதியாக சொல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக இருக்கிறது. இன்னும் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் வென்றால் கூட அரையிறுதிக்கு தகுதிபெற முடியும். 

நியூசிலாந்து

நியூசிலாந்து அணி இப்போது சிக்கலில் இருக்கிறது. எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். அல்லது ஒரு போட்டியில் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறலாம். ஆனால் மூன்றிலும் தோல்வியை தழுவினால் அரையிறுதி சிக்கலாகிவிடும். 

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் அதிர்ச்சி தோல்வியை தழுவிய நிலையில், பின்னர் சூப்பரான கம்பேக்கை கொடுத்தனர். 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் 3 போட்டிகள் எஞ்சியிருக்கின்றன. இதில் இரண்டு போட்டிகளில் வென்றால் கூட அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட முடியும். 

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மற்ற அணிகளின் முடிவு பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்க வேண்டும். நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் எஞ்சிய போட்டிகளில் தோல்வியை தழுவினால் பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 

ஆப்கானிஸ்தான்

இந்த உலக  கோப்பையில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எதிர்வரும் போட்டிகளில் அந்த அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை சிந்திக்கலாம். 

இலங்கை

ஆறு போட்டிகளில் இதுவரை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள இலங்கை, அரையிறுதிக்கான போட்டியில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. இருப்பினும் அந்த அணி கடைசி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முடிவு இலங்கை அணிக்கு சாதகமாகிருந்தால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது. 

நெதர்லாந்து

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நெதர்லாந்து அணிக்கும் கிட்டத்தட்ட அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பு  முடிந்துவிட்டது. 

பங்களாதேஷ் 

நடப்பு உலக கோப்பையில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து முதல் அணியாக வெளியேறியிருக்கிறது வங்கதேச அணி.

இங்கிலாந்து

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிட்டதட்ட அரையிறுதி சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது. எல்லா அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் கூட இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு மிக மிக குறைவு.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.