22,000 குடும்பங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை வழங்கும் நுவரகம் பொதுமக்களிடம் கையளிப்பு

22,000 குடும்பங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை வழங்கும் நுவரகம் பளாத மத்தி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது…

உலக நகரங்கள் தினமான நேற்று (2023.10.31) நுவரகம் பளாத மத்தி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அனுராதபுரம் பண்டுலகமவில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதமர்-

அனுராதபுர நகரத்தை ஜய ஸ்ரீ மஹா போதியின் நிழலின் கீழ்உள்ள உலகின் பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றாக உலகெங்கிலும் உள்ள பௌத்த மக்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த பிரதேச செயலகம் ஒரு சிறப்பு வாய்ந்த நகரத்தில் ஒரு சிறப்புவாய்ந்த அரசாங்க அலுவலகமாக உள்ளது. ஜய ஸ்ரீ மஹா போதி உள்ளிட்ட எட்டு புண்ணியஸ்தலங்களைக் கொண்ட இந்தப் பிரதேச செயலகம் தொடர்ந்தும் விசேட அலுவலகமாக செயற்பட்டு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

இப்பகுதியில் பல ஆண்டுகளாக வந்து குடியேறியவர்கள் தற்போது அரச காணி திணைக்களத்திடமிருந்து காணி உரிமையினை பெறுகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய டிஜிட்டல் திட்டத்தின் படி இங்குள்ள 22000 வீடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வீட்டிலிருந்து செய்திகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளனர். உலகின் பழமைவாய்ந்த இந்த நகரத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நகரமாக மாற்ற, அனைத்து குடியிருப்பாளர்களும் புதிய டிஜிட்டல் வலையமைப்பின் மூலம் பணிகளை செய்துகொள்ளக் கூடிய வசதிகள் இருக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்கு தேவையான நிதி ஏற்பாடுகளை எமது அமைச்சு ஒதுக்கியுள்ளது.

அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் சேவைகளை வழங்குவதை எளிதாக்குவதற்கும் மற்றும் அவர்கள் செலவழிக்கும் நேரத்தை குறைப்பதற்கும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் வழி ஏற்பட்டுள்ளது . இன்று தகவல் தொழில்நுட்பம் அனைவரது கைகளிலும் உள்ளது. கையடக்கத்தொலைபேசியின் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதி புதிய தலைமுறைக்கு தமது காலடியிலேயே கிடைக்கிறது. இந்த தலைமுறை தமது பெற்றோர்களும் இதற்காக உதவலாம்.

விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இப்பகுதிக்கு வருகைதரும் பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கு தேவையான உணவு வசதிகளை செய்துகொடுக்க முடியும். யாத்ரீகர்களின் வசதிக்காக ஒரு திட்டத்தை உருவாக்க, மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் அரசாங்கம் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கிறது.

இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். எம். சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க, யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, அனுராதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஜே.கே.ஜயசுந்தர, முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், நுவரகம் பளாத மத்தி பிரதேச செயலாளர், அதிகாரிகள், பொது மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.