மங்களூரு: தாயை மகன் கொன்ற வழக்கில், பலாத்கார முயற்சியில் கொலை நடந்தது அம்பலமாகியுள்ளது.
மங்களூரு கட்டீல் அருகே கொன்டெலா கிராமம் துர்காநகரில் வசித்தவர் ரத்னாஷெட்டி, 62. இவரது கணவர் இறந்துவிட்டார். தன் மகன் ரவிராஜ் ஷெட்டி, 33, உடன் ரத்னா வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை ரத்னாஷெட்டி வீட்டில் இருந்து, பயங்கர துர்நாற்றம் வீசியது.
அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். வீடு பூட்டிக்கிடந்தது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, உடல் அழுகிய நிலையில், ரத்னாஷெட்டி இறந்துகிடந்தார்.
தலைமறைவாக இருந்த ரவிராஜை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ‘பகீர்’ தகவல் வெளியானது. 26ம் தேதி, குடிபோதையில் வீட்டிற்கு வந்த ரவிராஜ் ஷெட்டி, பெற்றெடுத்த தாய் என்று கூட பாராமல், ரத்னாஷெட்டியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆத்திரத்தில் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசில் ரவிராஜ் கூறியுள்ளான்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement