சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அதன்படி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி (673) முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்(663) மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் (656),ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். ஹேசில்வுட் மற்றும் முகமது சிராஜ் முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 646 புள்ளிகளை பெற்று 7வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 11வது இடத்தை பிடித்துள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் முதலிடம் பிடித்துள்ளார். இந்த தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 2வது இடம் பிடித்துள்ளார். மேலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 5 மற்றும் 7வது இடத்தை பிடித்துள்ளனர். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேச அணியின் சாகிப் அல்ஹஸன் முதலிடம் பிடித்துள்ளார். இதில் இந்திய வீரர்கள் எவரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை.