பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே சிங்கசந்திராவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்டது. அக்டோபர் 27ஆம் தேதி இரவு, அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து பொம்மனஹள்ளி தொழிற்பேட்டை பகுதியில் வனத்துறையினர் நான்கு இடங்களில் கூண்டுகள் அமைத்து சிறுத்தையைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் கண்ணில் சிக்காமல் இருந்த சிறுத்தை இன்று காலை ஆனேகல் தாலுகா பொம்மனஹள்ளி குட்லு கேட் அருகே கிருஷ்ணாரெட்டி பேரங்காடி […]