கமலை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை : ரோபோ சங்கர்

கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ரோபோ சங்கர் தற்போது உடல் நலம் தேறி உள்ளார். அதோடு சில நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 234 வது படத்தை பிரம்மாண்ட விழாவாக எடுத்து நடத்தப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் மார்க்கெட் மீண்டும் பெரிய அளவில் சூடு பிடித்திருக்கிறது. பல பிரமாண்ட படங்களில் அவர் கமிட்டாகி வருகிறார். லியோ படத்தில் கமல் கொடுத்த வாய்ஸ் ஓவரை வைத்து சிலர் ட்ரோல் செய்தார்கள். ஆனால் கமல்ஹாசன் எல்லாம் நம்ம ஊரில் பிறக்க வேண்டிய நடிகரே இல்லை. அவர் வேற லெவல் நடிகர். லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கமலின் வாய்ஸை கேட்டதும் திரையரங்குகள் அதிர்ந்து போயின. இதற்கு மேல் நான் என்ன சொல்ல வேண்டும். அதனால் அவரைப் பற்றி விமர்சிப்பதற்கு இங்கே யாருக்கும் தகுதி இல்லை என்று கூறியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.