‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய், ‘நா ரெடிதான்’ பாடலில் இடம் பெற்ற வரிகளில் சிகரெட், மது தொடர்பான வார்த்தைகளின் சர்ச்சைகள் குறித்து பேசியவர் ‘சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்’ என்றார். மேலும், “ஒரு நெகடிவ் கதாபாத்திரத்திற்கு தேவையான விஷயங்கள் வச்சாங்க… அதெல்லாம் நீங்க எடுத்துக்க மாட்டாங்கனு தெரியும்… ஸ்கூல், காலேஜ் பக்கத்துல தான் ஒயின் ஷாப் இருக்கு.. அவங்க என்ன அடிச்சுட்டு போறாங்களா. அவங்க எல்லாம் ரொம்ப தெளிவு” என்றும் கூறினார்.

இதையடுத்து லோகேஷ் குறித்துப் பேசிய விஜய், “மாநகரம் திரும்பி பாக்க வச்சாரு, கைதி திரும்ப திரும்ப பார்க்க வச்சாரு… மாஸ்டர், விக்ரம் படம் மூலமா இந்தியாவை திரும்பி பார்க்க வச்சாரு.. லியோ மூலமாக…. ஹாலிவுட்தான் இருக்கு… திரும்பி பார்த்திருச்சா… பார்க்கும்… Keep rocking man… எனக் கூறியதும் லோகேஷ் எழுந்த நிலையில்.. ‘உனக்கு இது செட் ஆகல’ என விஜய் பதிலளித்தார்.
சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல பட்டங்களின் சர்ச்சைக் குறித்து பேசியவர், ” புரட்சி தலைவர் ஒருத்தர்தான், நடிகர் திலகம், புரட்சி கலைஞர் விஜய் காந்த்,உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்…தளபதி க்கு அர்த்தம் தெரியுமா… நீங்க மன்னர்கள் நீங்க ஆணையிடுற விஷயங்களை நான் செய்யிற தளபதி” என்றார்.