விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான ‘லியோ’ கடந்த அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
மிகுந்த எதிர்பார்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் பிளாஷ்பேக் குறித்த சர்ச்சைகள், கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணமிருந்தது. அதற்கும் இயக்குநர் லோகேஷ் விளக்கமளித்து வந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லியோ’வின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,

இதுபற்றி பேசிய லோகேஷ், “இதுதான் இந்த படத்தோட முதல் மேடை அதுவும் சக்ஸக் மீட். இந்த மேடையை என்னோட AD- களுக்கு எப்பவும் பயன்படுத்துவேன். மற்ற கலைஞர்களுக்கு சின்ன நேர்காணல் மூலமாக அங்கீகாரம் கிடைச்சுரும். படம் முடியுற கடைசி சமயத்துல என்னோட துணை இயக்குனர்கள் படில படுத்து தூங்கிட்டு இருந்தாங்க. இந்த படத்துல கிட்ட தட்ட 6-7 இயக்குனர்கள் இருக்காங்க.
அவங்களை பார்க்கும்போது சரியாக ஷாட் வைக்கணும்னு தோணும். ஒரு நாள் கவுதம் மேனன் சார்கிட்ட ஸ்பாட்ல டைலாக் கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு விஜய் சார் ‘இப்போ கொடுத்தானா பண்ணாதீங்க’னு சொன்னாரு.வெற்றி மாறன் சாரை நடிக்க வைக்கணும்னு ஆசை. முன்னாடியே வில்லன் கதாபாத்திரத்திற்கு முயற்சி பண்ணேன். படத்தோட இராண்டாம் பாதில லேக்கா இருக்குனு சொன்னாங்க. அதுக்கப்புறம் மக்கள் கூட்டமாக போய் பார்த்தாங்க. ரத்னா சொல்ற மாதிரிதான் ‘குடும்பங்கள் கொண்டாடும் கேங்ஸ்டர் படம்’ இது.

‘Drug free society’ பற்றிய கேள்விக்குப் பதிலளித்த லோகேஷ்,
“இது என்டர்டைன்மென்ட் சினிமாதான், கமர்சியல் சினிமாதான் முடிஞ்ச அளவுக்கு அதுல நல்ல விஷயம் சொல்லுவோம்.” என்றார். படத்தின் வெற்றி குறித்த கேள்விக்கு
“ஹெலிகாப்டர் பெயின்ட் அடிச்சுட்டு இருக்கிறதா சொன்னாங்க…” நக்கலாகச் சொல்லிச் சிரித்தார்.