சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபான கடைகளை நிர்வகித்து வரும் டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 20% தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தமிழக அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. […]