Man crushed to death by robot in South Korea | காய்கறி பெட்டி என நினைத்து தொழிலாளியை இயந்திரத்திற்குள் தள்ளிக்கொன்ற ‛எந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சியோல்: காய்கறி நிரப்பிய பெட்டிக்கும், மனிதருக்கும் வித்தியாசம் தெரியாத ரோபோ ஒன்றால் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தென் கொரியாவில் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த நபருக்கு 40 வயதாகிறது. அவர், ரோபோக்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அதில் ரோபோ ஒன்றுக்கு, காய்கறிகள் அடங்கிய பெட்டிகளை கன்வேயர் பெல்ட்டில் தள்ளும் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

கண்காணிப்பாளர், அந்த ரோபோவின் சென்சார்களை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கும், காய்கறி பெட்டிக்கும் வித்தியாசம் தெரியாத ரோபோ. கண்காணிப்பாளரை கன்வேயர் பெட்டிக்குள் தள்ளியது. அதில், அவருக்கு தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.