Kalpathi Chariot Festival will be flagged off on 16th Ratha Sangamam | கல்பாத்தி தேர் திருவிழா கொடியேறியது வரும் 16ம் தேதி ரத சங்கமம்

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு நேற்று முன்தினம் கொடியேற்றப்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காட்டில் கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழா, நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு துவங்கியது.

வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வேத பாராயணம் ஆகியவை நடந்தது.

காலை, 10:15 மணிக்கு கோவில் மேல்சாந்தி பிரபுசேனாபதியின் தலைமையில் கொடியேற்றம் நடந்தது.

விழா நடக்கும் உப கோவில்களான, மந்தகரை மகாகணபதி, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோவில்களில் பக்தர்களின் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது.

தேர் திருவிழாவை முன்னிட்டு, ஐந்து நாட்கள் நடக்கும் சங்கீத உற்சவத்தை, நேற்று மாலை, 6:00 மணிக்கு சாத்தபுரம் மணி அய்யர் சாலையில் எம்.எல்.ஏ., ஷாபி பரம்பில் தலைமையில், மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி துவக்கிவைத்தார்.

வரும் 14, 15, 16ம் தேதிகளில், திருதேரோட்டம் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான ‘ரத சங்கமம்’, 16ம் தேதி மாலை நடக்கிறது. அன்று பாலக்காடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளித்து, பாலக்காடு மாவட்ட கலெக்டர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.