What to watch on Theatre & OTT: இந்த தீபாவளிக்கு தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் என்ன படம் பார்க்கலாம்?

ஜப்பான் (தமிழ்)

ஜப்பான்

‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜிப்ஸி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. காமெடி, அரசியல் நையாண்டி, நகைக்கொள்ளை உள்ளிட்டவற்றை பற்றிப் பேசும் இப்படம் நவம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (தமிழ்/ தெலுங்கு/ மலையாளம்/ இந்தி)

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜிகர்தண்டா’ படத்தின் அடுத்த பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. காமெடி, ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Kida (தமிழ்)

Kida

ரா. வெங்கட் இயக்கத்தில் காளி வெங்கட் தீபன், பாண்டியம்மா, ‘பூ’ ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்த் திரைப்படம் ‘கிடா’. தாத்தா, பேரன் மற்றும் அவர்கள் வளர்க்கும் ஆடு மூன்றையும் சுற்றி நடக்கும் மனதிற்கு இலகுவான கிராமத்துக் கதையான இது நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Raid (தமிழ்)

Raid

கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஶ்ரீதிவ்யா, அனந்திகா, டேனியல் உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘Raid’. சமூகத்தில் தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்கும் சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் (விக்ரம் பிரபு), என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டார், அவரது நோக்கம் என்ன என்பதுதான் இதன் கதைக்களம். ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தி மார்வெல்ஸ் (ஆங்கிலம், தமிழ்)

தி மார்வெல்ஸ்

நியா டகோஸ்டா இயக்கத்தில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ், இமான் வெல்லானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி மார்வெல்ஸ்’. ‘கேப்டன் மார்வெல்’ கரோல் டான்வர்ஸ், ‘மிஸ் மார்வெல்’ கமலா கான் மற்றும் மோனிகா ராம்பியூ ஆகிய மூன்று பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் ஒன்றாகக் களமிறங்கும் ஆக்‌ஷன் திரில்லரான இத்திரைப்படம் நவம்பர் 10ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.

Bandra (மலையாளம்)

Bandra

அருண் கோபி இயக்கத்தில் தமன்னா, திலீப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் ‘Bandra’. பாலிவுட் ஜாம்பவானக இருந்து தற்கொலை செய்துகொள்கிறார். அவரின் கடந்த கால வாழ்க்கையைத் தேடிப் பார்க்கையில் அவரும், பாலிவுட் ராணியான தமன்னாவிற்கும் இடையிலான காதலும், அதையொட்டி நடந்த சோகங்களும் தெரிய வருவதுதான் இதன் கதைக்களம்.

Tiger -3 (இந்தி)

Tiger -3

மனீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம் ‘Tiger -3’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தில் ஸ்பை யூனிவர்ஸின் கீழ் வரும் இதில் ஷாருக்கானின் ‘பதான்’ பாத்திரமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Garadi (கன்னடம்)

Garadi

யோகராஜ் பட் இயக்கத்தில் பி.ரவி சங்கர், சோனல் மான்டீரோ, பிருத்வி ஷாமனூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னட திரைப்படம் ‘Garadi’. மல்யுத்த சண்டையை மையமாகக் கொண்ட காதல் கலந்த ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 10ம் தேதி வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Pippa (இந்தி) – Amazon Prime Video

Pippa

ராஜா மேனன் இயக்கத்தில் இஷான் கட்டார், மிருணால் தாக்கூர், பிரியன்ஷு பைன்யுலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘Pippa’. போர், ஆக்‌ஷன், திரில்லர், எமோஷனல் திரைப்படமான இது நவம்பர் 10ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

1971-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையானப் போரில் கிழக்குப் பகுதியில் 45வது டேங்க் ஸ்குவாட்ரனில் போர் செய்த ராணுவ வீரனான் பிரிகேடியர் பல்ராம் சிங் மேத்தாவைப் பற்றிய கதை இது.

The Killer (ஆங்கிலம்) – Netflix

The Killer

டேவிட் பின்சர் இயக்கத்தில் மைக்கேல் ஃபாஸ்பெண்டர், டில்டா ஸ்விண்டன், சார்லஸ் பார்னெல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Killer’. ஸ்பை, ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 10ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சிரீஸ்கள்

லேபிள் (தமிழ்) – Disney + Hotstar

லேபிள்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய், சரண்ராஜ், இளவரசு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘லேபிள்’. வடசென்னை மக்கள் மீது கட்டமைக்கப்படும் தவறான பிம்பத்தையும், அடையாளத்தையும் உடைக்க சட்டப் போராட்டம் நடத்தும் தனி மனிதரான ஜெய்யின் கதைதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் நவம்பர் 10ம் தேதி முதல் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

The Vigilante (கொரியன்) – Disney + Hotstar

The Vigilante

லீ விட்டேக்கர் இயக்கத்தில் ஜெட் ஜாண்ட்ரூ, எரிக் பியர்ஸ், ஜேமி எம் டிம்மன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Vigilante’. தனது 13 வயது சகோதரியைக் கடத்திய கும்பலைப் பிடிக்கவும், இதுபோன்ற கடத்தல் காரர்களை ஒழிக்கவும் போராடும் ராணுவப் பெண்ணின் கதைதான் இந்த வெப்சீரிஸ். ஆக்‌ஷன், திரில்லர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் நவம்பர் 10ம் தேதி ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியெட்டர் டு ஓடிடி

இறுகப்பற்று (தமிழ்) – Netflix

இறுகப்பற்று விமர்சனம்

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறுகப்பற்று.’ காதல், திருமணம், விவாகரத்து என உறவுகளுக்கிடையான சிக்கல்களைப் பேசும் இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Road (தமிழ்) – Aha Tamil

The Road (தமிழ்)

அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா, ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Road.’ நெடுஞ்சாலையில் நடக்கும் தொடர் மர்மமான விபத்தின் பின்னணி என்ன என்பதுதான் இதன் கதைக்களம். க்ரைம், திரில்லர் திரைப்படமான இது ‘Aha Tamil’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Ghoomer (இந்தி) – Zee5

Ghoomer

ஆர்.பால்கி இயக்கத்தில் ஷபானா ஆஸ்மி, அபிஷேக் பச்சன், சயாமி கெர், அங்கத் பேடி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ghoomer’. ஒரு கையை இழந்த கிரிக்கெட் வீராங்கனையின் வெற்றிக் கதையான இப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஒரு கையை இழந்த ‘கரோலி டாகாஸ்’, இரண்டு முறை ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்ற ஹங்கேரிய துப்பாக்கிச் சுடும் வீரர். அவரின் வாழ்க்கைக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்டு இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Valatty (மலையாளம்) – Disney + Hotstar

Valatty

தேவன் இயக்கத்தில் விஜய் பாபு, ரோகினி, ரகு சுபாஷ் சந்திரன், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் ‘Valatty’. டாமி, அமலு என்ற இரு செல்ல நாய்களைச் சுற்றி நடக்கும் கதையான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்தத் தீபாவளிக்கு நீங்கள் என்ன படம் பார்க்கப் போகிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் பதிவிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.