`வேலையைவிட்டு நின்றால் 4 லட்சம்' ஊழியர்களுக்கு அமேசான் கொடுத்த ஆப்ஷன்… எதற்காக தெரியுமா?!

ஒரு நிறுவனம் தன் ஊழியர்கள் நிறுவனத்திற்கு உண்மையாகப் பணியாற்றுகிறார்களா அல்லது இரட்டை மனதோடு ஏனோ தானோ என்று வேலை செய்கிறார்களா என்பதை எப்படி அறிந்து கொள்வது… 

`வேலையை விட்டு நின்றால் 4 லட்சம் உங்களுக்கு’ என்று சொன்னால் எப்படி இருக்கும்?. 

அமேசான்

இதைத்தான் அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) 2014-ல் செய்திருக்கிறார். பெசோஸ் தனது தனித்துவமான தலைமைத்துவ அணுகுமுறைகளுக்குப் பெயர் பெற்றவர். இவர் உறுதியான பணியாளர்களை நிறுவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக `பே டு க்விட்’ (Pay to Quit) என்ற ஆப்ஷனை ஊழியர்களுக்கு வழங்கி இருக்கிறார்.

ஆண்டுதோறும் ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து தாமாக வெளியேறுவதற்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி நிறுவனத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு 2,000 அமெரிக்க டாலர்கள் முதல் 5,000 அமெரிக்க டாலர்கள் வரை வழங்கப்படும். (இந்திய மதிப்பில் ரூ.4.1 லட்சம் வரை). 

`தயவுசெய்து இந்தச் சலுகையை எடுக்காதீர்கள்’… `நீங்கள் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’… என்று எழுதப்பட்ட கடித்ததோடு சலுகைகள் குறித்த விவரங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படிச் செய்வதன் பின்னால் ஒரு நோக்கம் இருக்குமல்லவா, பெசோஸ் இதன் நோக்கம் குறித்துக் கூறுகையில், `மக்களை நிறுத்தவும், அவர்கள் உண்மையில் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதுமே இதன் நோக்கம். விரும்பாத இடத்தில் தங்கியிருக்கும் ஊழியர் இறுதியில் நிறுவனத்திற்கும் தனக்கும் என இருவருக்குமே மோசமானவராகிறார்’ என்று கூறியுள்ளார். 

ராஜினாமா

“நிறுவனம் ராஜினாமா செய்ய பணத்தை வழங்குவதன் மூலம் அதிருப்தியான ஊழியர்களையும், அவர்கள் கூறும் காரணத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

ஒருவேளை நிறுவனம் வழங்கும் சலுகையை ஊழியர்கள் நிராகரித்தால், அவர்கள் எதிர்காலத்தில் நிறுவனத்தில் அதை முதலீடு செய்கிறார்கள்… இது நிறுவனத்தின் உற்பத்தித்திறனையும் அர்ப்பணிப்பையும் அதிகரிக்கிறது” என்று  பொருளாதார நிபுணர் உரி க்னீசி கூறியுள்ளார். 

நீங்கள் பணிபுரியும் நிறுவனம், `பே டு க்விட்’ முறையில் பணம் கொடுத்து வேலையை விட்டு நிற்பதற்கான ஆப்ஷனை வழங்கினால் என்ன செய்வீர்கள்?!… கமென்ட்டில் சொல்லுங்கள்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.