தீபாவளி: “2013 டூ 2022 வரை தங்கம் விலை ரீவைண்ட்!"

‘எப்படா தீபாவளி வரும்?’ என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தீபாவளி இன்னும் ஒரு நாளில் வரப்போகிறது. இதேப்போல இந்த ஆண்டு தொடக்கம் முதல் ‘எப்படா தங்கம் விலை குறையும்?’ என்று காத்திருந்த மக்களுக்கு, தங்கம் விலை ஜூலை மாதம் முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி, கடந்த மாதம் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீன போரால் எகிற தொடங்கியது.

தங்கம் விலை குறைஞ்சுட்டு வருது…தீபாவளிக்கு வாங்கிடலாம்

‘தங்கம் விலை குறைஞ்சுட்டு வருது…தீபாவளிக்கு வாங்கிடலாம்’ என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு, இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தீபாவளி அன்று தங்கம் விலை எவ்வளவு இருக்கும்? என்று இன்னும் ஒரு நாளில் தெரிந்துவிடும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தீபாவளி அன்று ‘தங்கம் விலை என்னவாக இருந்தது?’ என்ற ஒரு குட்டி ரீவைன்ட் பார்ப்போம்…வாங்க…

  • 2013-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் ரூ.2,861 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.22,888 ஆகவும் விற்பனை ஆகியிருக்கிறது.

  • 2014-ம் ஆண்டு காலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.2,592ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.20,736 ஆகவும்…மாலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.2,587 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.20,696 ஆகவும் விற்பனை ஆனதாம்.

  • 2015-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் ரூ.2,439-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.19,512-க்கும் விற்பனை ஆகியிருக்கிறது.

  • 2016-ம் ஆண்டு ரூ.2,868-க்கு ஒரு கிராம் தங்கமும், ரூ.22,944-க்கு ஒரு பவுன் தங்கமும் விற்பனை ஆகியுள்ளது.

  • 2017-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் காலையில் ரூ.2,820-க்கும், மாலையில் ரூ.2,825-க்கும், ஒரு பவுன் தங்கம் காலையில் ரூ.22,560-க்கும், மாலையில் ரூ.22,600-க்கும் விற்பனை ஆகியுள்ளது.

தீபாவளிக்கு தங்கம் விலை என்ன?
  • 2018-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் ரூ.3,023-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.24,184-க்கும் விற்கப்பட்டுள்ளது.

  • 2019-ம் ஆண்டு ரூ.3,688-க்கு ஒரு கிராம் தங்கமும், ரூ.29,504-க்கு ஒரு பவுன் தங்கமும் விற்பனை ஆகியுள்ளது.

  • 2020-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் ரூ.4,783-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.38,264-க்கும் விற்கப்பட்டுள்ளது.

  • 2021-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் ரூ.4,447-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.35,576-க்கும் விற்பனை ஆகியிருக்கிறது.

  • 2022-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் ரூ.4,740-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.37,920-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ரூ.19,000-24,000-க்குள் இருந்த ஒரு பவுன் தங்கம் விலை, 2019-ம் ஆண்டு ரூ.29,504 ஆக உயர்ந்திருக்கிறது. அதன்பின்னர், 2020-ம் ஆண்டு ரூ.38,264 ஆக எகிறிய ஒரு பவுன் தங்கம் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையே ரூ.35,576 ஆகவும், ரூ.37,920 ஆகவும் விற்கப்பட்டுள்ளது.

போன வருடம் ரூ.37,920…இந்த வருடம்???

கடந்த திங்கள்கிழமையில் இருந்து படிப்படியாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,645 ஆகவும், பவுன் ஒன்றுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160 ஆகவும் விற்பனை ஆகிறது. இன்னும் ஒரு நாள் பொறுத்திருந்து தீபாவளி அன்று தங்கம் எத்தனை ரூபாய்க்கு விற்பனை ஆகப்போகிறது என்று பார்ப்போம் மக்களே…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.