சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 22,23,24 தேதிகளில் ஒரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்து உள்ளது. இந்த காலக்கட்டங்களில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. இடையே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானதால், கடலோர மாவட்டங்கள் உள்படபல பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்தது. […]