Uttarakhand tunnel collapse | ரவா கிச்சடி அனுப்பி வைப்பு! பிறந்தது நம்பிக்கை: குகைக்குள் சிக்கிய 41 பேர் உயிரோடு தான் இருக்கின்றனர்

டேராடூன்: உத்தரகண்ட் சுரங்கம் தோண்டும் போது குகைக்குள் சிக்கிய 41 பேர் உயிரோடு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு இன்று (நவ.,21) குழாய் மூலம் சூடான ரவா கிச்சடி திரவ ஆகாரமாக வழங்கப்பட்டுள்ளது. குழைவான பருப்பும் குழாய் மூலம் பாட்டில்களில் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 10 நாட்களாக தொழிலாளர்கள் நிலை என்னவென்று தெரியாமல் இருந்த சூழலில் தற்போது நல்ல தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தி அறிந்து தொழிலாளர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு வார மீட்பு முயற்சிக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி கூறியுள்ளார்.

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா – தண்டல்காவ்ன் இடையே மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, சுரங்கப் பாதையின் முகப்புக்கும், தொழிலாளர்கள் பணி செய்த பகுதிக்கும் இடைபட்ட பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். ஒரு வாரமாக, அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுகள் உள்ளிட்டவற்றை வழங்க 40 மீட்டருக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை கண்காணிக்க, உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.