புதுடில்லி செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பீலா திரிவேதி, எஸ்.சி. சர்மா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ”செந்தில் பாலாஜி பல்வேறு உடல்நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் பக்கவாதம் ஏற்படலாம் என பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது,” என, வாதிட்டார்.
”அவருக்கு உள்ள பிரச்னைகள் ஏற்கனவே இருந்தவை. இது நாள்பட்ட பிரச்னை,” என, சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் சமீபத்திய மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட அமர்வு, விசாரணையை, 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement