Electric Lunch Box: இப்போது தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலம் முடிந்து அடுத்து டிசம்பர், ஜனவரியில் அதாவது தமிழ் மாதப்படி மார்கழி, தை மாதங்களில் பனியின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இதில் பலரும் சிரமப்படுவார்கள் என்றாலும் முக்கியமாக பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் காலையிலும், வீடு திரும்பும்போது மாலையிலும் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள்.
சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிடும், தெருதோறும் மழை நீராக இருக்க எப்போதும் ஒரு குளிர்ந்த சூழலிலேயே இருக்க நேரிடும். அந்த வகையில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு காலையில் புறப்படுவோர் கொண்டு செல்லும் மதிய உணவு என்பது மிகவும் குளிர்ச்சியடைந்துவிடுவது குளிர்காலத்தில் வாடிக்கைதான். பலரும் தற்போது சில்வர் மற்றும் டப்பர்வேர் லஞ்ச் பாக்ஸ்களில் வைத்துக்கொண்டு உணவை எடுத்துச்செல்கின்றனர். ஆனால், இந்த உணவுகள் மதிய வேளையில் குளிர்ந்துவிடும் என்பதால் பலராலும் சாப்பிட இயலாது.
குறிப்பாக, குளிர் காலத்தில் சுட சுட உணவை சாப்பிடவே பலரும் விரும்புவார்கள். உணவு மிகவும் குளிர்ந்துவிட்டால் அதனை பலரும் குப்பையில் தட்டிவிடுவார்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள். எனவே வீட்டில் இருந்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கோ மதிய உணவு எடுத்துச் செல்பவர்கள் இந்த எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ்களை வாங்கினால் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
உங்களின் உணவை எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸில் வைத்துக்கொண்டால், அவற்றை சில நிமிடங்களிலேயே சூடாக்கி விடலாம். பல நிறுவனங்களின் எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ்கள் சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பாக, அதில் பிரபலமான பிராண்டுகளான மில்டன், பிரெஸ்டீஜ், உஷா மற்றும் ஹேவல்ஸ் போன்றவற்றின் தயாரிப்புகள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸை நீங்கள் சுமார் 500 ரூபாய்க்கு சற்று அதிகமாகவும் 1500 ரூபாய்க்குள்ளும் வாங்கலாம்.
Cello Newton Electric Lunch Box
இந்த எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ் உங்கள் வீட்டு உணவு குளிர்ந்துவிடாமல், அதன் சுவையை முழுமையாகவும், சூடாகவும் உண்டு அனுபவிக்க உதவும். இந்த பெட்டியில் சில நிமிடங்களில் உணவை சூடாக்க முடியும். இது வெப்பநிலையைக் கண்காணிக்கும் ஒரு தெர்மோஸ்டாட்டையும் கொண்டுள்ளது மற்றும் அது அதிகபட்ச அளவில் சூடாகும்போது தானாகவே அணைக்கப்படும். இந்த பாக்ஸ் 1,234 ரூபாய்க்கு கிடைக்கிறது.
Nexx Hott- 2 Stainless Stell Electric Lunch Box
இது ஒரு சிறிய மற்றும் மலிவான எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ் ஆகும். இந்த பெட்டி இரண்டு எஃகு கொள்கலன்களுடன் வருகிறது, இது ஒரு சிறிய பாக்ஸ் ஆப்ஷனாக அமைகிறது. இந்த லஞ்ச் பாக்ஸ் உணவை நிமிடங்களில் சூடாக்கும், எனவே மதியம் சூடான மற்றும் சுவையான உணவை நீங்கள் அனுபவிக்கலாம். இது அமேசானில் வெறும் 849 ரூபாய்க்கு கிடைக்கிறது.
JAYPEE Hotline 3
இந்த எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ் குளிர்காலத்தில் உணவுகளை சூடாக வைத்திருக்க ஒரு சிறந்த தீர்வை தரும். இந்த பெட்டியில் டிபன் உணவை 30 முதல் 45 நிமிடங்களில் சூடாக்க முடியும். இதன் எடை 1000 கிராம் மட்டுமே, இதன் காரணமாக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதன் விலை 1,047 ரூபாய் ஆகும்.
Milton Furtron Electric Lunch Box
இந்த டிபன்பாக்ஸை சுவரில் இருக்கும் மின்சார பிளக்பாயிண்ட் அல்லது கார் அடாப்டரில் செருகுவதன் மூலம் உணவை சூடாக்கும் திறன் கொண்டது. பெட்டியை பிளக்பாயிண்டில் சொருகிய பின் வெறும் 3 நிமிடங்களுக்கு அடைத்துவைத்தாலே உணவு சுடாகிவிடும். உங்கள் உணவை சூடாகவும் சுவையாகவும் மாற்ற இது போதுமானதாக இருக்கும். இதன் விலை வெறும் 1,623 ரூபாய்.
மேலும் படிக்க | உங்கள் மொபைல் பேட்டரி நல்ல நிலையில் உள்ளதா… கண்டறிவது எப்படி?